ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட யாதவர் சமுதாய பொதுக்கூட்டம் மற்றும் யாதவர் எழுச்சி மாநாடு
திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டையில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் யாதவர் சமுதாய மக்களின் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி உள்ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை யாதவர் எழுச்சி மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட யாதவர் சமுதாய நடத்தும் பொதுக்கூட்டம் மற்றும் யாதவர் எழுச்சி மாநாடு திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டத்தைச் சேர்ந்த யாதவர் சமுதாயத்தினர் பலர் தபோவனம், மணம்பூண்டி நான்கு முனை சந்திப்பு, பேருந்துநிலையம், மேலவீதி, ஏரிக்கரை மூலை, சந்தைப்பேட்டை உயர் ஆபிஸ் வழியாக இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அணிவகுத்து ஆங்காங்கே பட்டாசு வெடித்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக மிக எழுச்சியுடன் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு வாய்ந்த எழுச்சி மாநாட்டில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜே.டி பாஸ்கர் யாதவர் தலைமையில், ஆசிரியர் புஷ்பராஜ் யாதவர் வரவேற்புரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் யாதவர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னுசாமி யாதவர், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவநீத கண்ணன் யாதவர், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் யாதவர் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
இதன் பின்னர் இந்த மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானமாக:
பிற்படுத்தப்பட்ட பிரிவில் யாதவர் சமுதாய மக்களின் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி உள்ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும்.
பால்வளத்துறை கால்நடைத் துறை தலைவராக யாதவர் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
திருக்கோவிலூர் நகரப் பகுதியில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலை அமைக்கப்பட வேண்டும்.
என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யாதவர் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் யுவராஜ் யாதவர் நன்றி உரை கூறினார்.


