பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடியில் அகில இந்திய யாதவ மகாசபை செயல் வீரர்கள் கூட்டம் கொடியேற்று விழா
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராம ஒன்றியம் சித்திரைசாவடி கிராமத்தில் அகில இந்திய யாதவ மகா சபையின் முதல் கொடியேற்றம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் Er.R.J.D.பாஸ்கர் யாதவ் கலந்து கொண்டு கொடியேற்றி செயல்வீரர்கள் கூட்டத்தில்
சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் அகில இந்திய யாதவ மகாசபை தேசிய செயலாளர் பாஸ்கர் யாதவ் பேசியதாவது:
தமிழகத்தில் யாதவ சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரலாறு, பாரம்பரியம் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக யாதவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து வரும் யாதவ சமுதாய மக்களுக்கு வருகின்ற நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் யாதவ சமுதாயத்திற்கென உரிய அங்கீகாரத்தை மத்திய அரசும், மாநில அரசும் கொடுக்க வேண்டும். கல்வி, பொருளாதாரம், அரசு பணி போன்றவற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே யாதவ சமுதாயத்தினர் உள்ளனர். ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி யாதவ சமுதாய மக்களுக்கு அரசுப்பணி, பொருளாதாரம், கல்வியில் உரிய அங்கீகாரத்தை அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும். இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு செலவில் திருஉருவ சிலை நிறுவப்பட வேண்டும்.
தமிழ்நாட்டை ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் யாதவ மக்களுக்கு முன்னுரிமை அளித்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். யாதவ சமுதாயத்திற்கு 5% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். தமிழக யாதவர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக கால்நடை வளப்போர் நல வாரியத்தை அமைத்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றத்தையும், சமூக பாதுகாப்பையும் உருவாக்கி தர வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் யாதவ சமுதாய மக்களின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் யாதவ இனத்தவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தேசிய செயலாளர் பாஸ்கர் யாதவ் பேசினார்.
மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய ,நகர, கிளை ,நிர்வாகிகள் & இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.









