மாவீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை & யாதவ சமுதாய பொதுகூட்டம் 2023

பண்ருட்டியில் அகில இந்திய யாதவ மகாசபை சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் குருபூஜை விழா நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். யாதவ மகாசபை நிர்வாகிகள் முத்துப்பிள்ளை, கண்ணன், நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகில இந்திய யாதவ மகாசபை தேசிய செயலாளர் பாஸ்கர் யாதவ், மூத்த வழக்கறிஞர் சீனி ஜெயராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக யாதவ மகா சபை சங்கத்தினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக வருகை தந்து மாவீரர் அழகுமுத்துக்கோன்
அவர்களுக்கு திருஉருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

யாதவ மகாசபை தேசிய செயலாளர் பாஸ்கர் யாதவ் பேசியதாவது:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக யாதவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அரசியலில் நுழைந்து தவிர்க்க முடியாத சக்திகளாக வளர்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து வரும் யாதவ சமுதாய மக்களுக்கு வருகின்ற நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் யாதவ சமுதாயத்திற்கென உரிய அங்கீகாரத்தை மத்திய அரசும், மாநில அரசும் கொடுக்க வேண்டும். கல்வி, பொருளாதாரம், அரசு பணி போன்றவற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே யாதவ சமுதாயத்தினர் பயன்பட்டு வருகின்றனர். ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி யாதவ சமுதாய மக்களுக்கு அரசுப்பணி, பொருளாதாரம், கல்வியில் உரிய அங்கீகாரத்தை அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும். தமிழகத்தில் பரவலாக வாழக்கூடிய யாதவ மாணவ, மாணவிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சியும், பொருளாதாரம் மேம்பாட்டு அடையவும் யாதவ மகா சபை அயராவது பாடுபட்டு வருகிறது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு செலவில் திருஉருவ சிலை நிறுவப்பட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாதவ சமுதாய மக்களுக்கென உரிய அங்கீகாரத்தை மத்திய, மாநில அரசுகள் கொடுக்க வேண்டும், யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
என தேசிய செயலாளர் பாஸ்கர் யாதவ் பேசினார். நிகழ்ச்சியில் யாதவ மகாசபை நிர்வாகிகள் சுரேஷ், செந்தில், நாகராஜன், சதீஷ், ராஜேஷ் மற்றும் மாவட்ட , நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.